1994 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அவ்வை பாட்டி சொன்ன மொழி
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.
இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு
அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.
மஞ்சளுன்னா மங்கலமின்னு
மங்கையரெல்லாம் சொல்வாங்க
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்றாங்க.
இந்தியாவை நாடு பிடிக்க
டங்கல் திட்டம் போட்டாரு
பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு
நரசிம்மராவு சொல்றாறு
மானங்கெட்ட ஜாக்ஸன் என்று
கட்டபொம்மன் சொன்னாறு
எட்டப்பந்தான் என் குரு என்று
மன்மோகன்சிங் சொல்றாறு
கப்பலோட்டி சிறை சென்றவர்
செக்கிழுத்த சிதம்பரம்
பங்கு பிடித்து பணம் சேர்த்தவர்
பாவன்னா சிதம்பரம்
இப்படியே விட்டொமுன்னா
நாட்டை ஏப்பம் விடுவாங்க
மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து
எதிர்து நிப்போம் வாருங்க
குட்ட குட்ட குனிய மாட்டோம்
எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம்
சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல்
சீறிப் பாய்வோம் வாருங்க.
சமையலறைப் பெண்களெல்லாம்
அரசியலைப் பாக்கணும்
பெண்களெல்லாம் முடிவெடுத்தா
டங்கல் திட்டம் தூளாகும்
கிச்சிலி சம்பா பச்சரிசி
சோறாக்கினா ஜோருங்க அதை
ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே
மருந்து வச்சது யாருங்க?
......... சி பி ரவிசங்கர்