Saturday, October 23, 2010

ஹிந்தி தின விழாவில் பீட் சேர்ந்திசை

செப்டம்பர் பத்தாம் தேதியன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை தலைமை அலுவலகத்தில் ஹிந்தி தின விழாவில் பீட் குழுவின் பன் மொழி பாடல்கள் சேர்ந்திசை நடைபெற்றது.

Saturday, October 16, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

பாரதியார்...... M B ஸ்ரீநிவாஸன்...... சுருதி 7

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே ‍ உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த‌
கவிதையிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈன்றிடும்
காலி இனத்தினிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

பூமி

அறிவொளி இயக்கப் பட்டறையில் உருவானது

ஆண்டுகள் ஆண்டுகளாய்
நம்மின் நினைவுகளில்
என்றும் அழியாதொரு பூமி
வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தரவேண்டிய‌
ஜன்ம கடனல்லவோ பூமி

இது நம் முன்னோடிகள் தந்த சொத்தல்ல‌
இது கயமைக் கூட்டத்தார் சுரண்டிக் கொழுத்திட‌
அளவின்றி சுரக்கும் பாத்திரமல்ல‌

மலைகளை மார்பில் தழுவிக்கிடக்கும் தரைகளில்
இச்சமவெளிகளில்
யுகாந்திரங்கள் பலவாய்
இம் மண்ணில் தணலும்
தண்மையும் மரமும் தளிருமாய்

உள்ள கிளர்ச்சி தரும் பேரெழிலாய்
மர நிழலில் தாலாட்டி மடி மீதில் கிடத்தி
தலைமுறைகள் பலவற்றை ஊட்டி வளர்த்து

இடியைப் பிறப்பிக்கும் கொடு மின்னல்கள்
நம் இதயங்களை கீறி பாய்ந்த போதில்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து
அவளே அபயமளித்தாள் மடி தந்து
தரையின் நேசம் போல் வழிந்தொழுகும் நதிகள்
நம்மின் தாகங்களுக்கு குளிர் நீர் ஈந்து
நம்முள் எரியும் பசித்தீ தணித்திட‌

வயல்களில் கதிர்கள்
மரங்களில் கனிகள்

நம்மின் அந்தி வானம் சிவந்திட‌
குருதியில் மூழ்கிடும் சூரியன் உயர்ந்திடும் சந்திரன்
நம்மின் இரவுகளை பால் கடலில் குளிர்ப்பிக்க‌
புலரும் வரை எரிகின்ற சந்திரன்

எங்கே பால் நிழல் சுரக்கும்
மரமெல்லாம் எங்கே?

அலறி வரும் கொடுவாளின்
பல்லில் சிதையும்
தூரத்து மாளிகையின் பணப்பெட்டி நிறையும்

எங்கே மண்ணின் விரி மார்பில் கசிந்தொழுகும் நதிகள்
கழிவும் கிருமியும் நதியில் கலந்திட‌
ஆஸ்திகள் மாளிகை மேலும் உயரும்

விழித்திடுக விழித்திடுக விழித்தெழுந்திடுக‌
எழுந்திடுக விழிதெழுந்திடுக‌

பழங்கால தலைமுறைகள் சீதனமாய் தந்ததொரு
பாட்டன் சொத்தல்ல பூமி

வருமொரு தலைமுறைக்கு நாமும்
திருப்பித் தர வேண்டிய ஜென்ம கடனல்லவோ பூமி
மனிதனை மனிதனாய் மாற்றிய பூமி
கொடியவர்கள் பாலைவனமாக்கும் இப்பூமி
சோலை வனமாகட்டும்
இனி நம் கையில் பூமி