Friday, November 5, 2010

ஏகாதிபத்திய ஒபாமாவே .....

2010 நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு
1994 ‍ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அவ்வை பாட்டி சொன்ன மொழி
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு
அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

மஞ்சளுன்னா மங்கலமின்னு
மங்கையரெல்லாம் சொல்வாங்க‌
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்றாங்க.

இந்தியாவை நாடு பிடிக்க
டங்கல் திட்டம் போட்டாரு
பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு
நரசிம்மராவு சொல்றாறு

மானங்கெட்ட ஜாக்ஸன் என்று
கட்டபொம்மன் சொன்னாறு
எட்டப்பந்தான் என் குரு என்று
மன்மோகன்சிங் சொல்றாறு

கப்பலோட்டி சிறை சென்றவர்
செக்கிழுத்த சிதம்பரம்
பங்கு பிடித்து பணம் சேர்த்தவர்
பாவன்னா சிதம்பரம்

இப்படியே விட்டொமுன்னா
நாட்டை ஏப்பம் விடுவாங்க‌
மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து
எதிர்து நிப்போம் வாருங்க‌

குட்ட குட்ட குனிய மாட்டோம்
எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம்
சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல்
சீறிப் பாய்வோம் வாருங்க.

சமையலறைப் பெண்களெல்லாம்
அரசியலைப் பாக்கணும்
பெண்களெல்லாம் முடிவெடுத்தா
டங்கல் திட்டம் தூளாகும்

கிச்சிலி சம்பா பச்சரிசி
சோறாக்கினா ஜோருங்க ‍அதை
ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே
மருந்து வச்சது யாருங்க‌?

......... சி பி ரவிசங்கர்

நாட்டுபுற பாடல்

ஏஹேஹே....... சல் சல் சல் சல் ..........

வாழக்கா ஏத்தும் வண்டி வடசேரி போகும் வண்டி
வாழக்கா வித்தோடனே வளயல் பண்ணி போடுறேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

சல் சல் சல் சல் ..........

பூசணிக்கா ஏத்தும் வண்டி பூலோகம் போகும் வண்டி
பூசணிக்கா வித்தோடனே பொடவ வாங்கித் தாரேன்

ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி
ராசம்மா ராசாத்தி ராசம்மா ராசாத்தி

பிச்சி பிச்சி பிச்சி பிச்சீ
மாமோ பிச்சிப் பூ மல்லிக பிச்சிப்பூ (5)

ஏரியிலே எலந்தம்பழம் என் தங்க வச்ச மரம்
காயும் இல்ல பூவும் இல்ல கண்டவுக வச்ச மரம்

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

பொண்ணு வருது பொண்ணு வருது
பொட்டி வண்டியிலே
பொண்ண பெத்த தாயார் வருது
டொக்கு வண்டியிலே

மாமோ பிச்சிப்பூ மல்லிக பிச்சிப்பூ (5)

அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
ஆத்தங்கரையிலே பாவக்காய அறுக்கச் சொன்னாங்க‌
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
கம கம கம கம உம் ... ஹா‌
பின்னே கொஞ்சம் நெய்ய ஊத்தி வறுக்கச் சொன்னாங்க
அத்தான் வந்தாங்க அத்தான் வந்தாங்க‌

தும் ஹும் தும் ஹும் ......
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
ஆமாம் சொல்லு
தன்னே நானே நானே நன்னே நானே நன்னே
அப்படி சொல்லு

மூக்குத்தி தன்னே நானே மினு மினுங்க‌
முகமெல்லாம் த்ன்னே நானே சோதி மின்ன‌
தன்னே நானே..................

சாந்திடிக்க தன்னே நானே சருகுதிர‌
சாந்து மேலே தன்னே நானே பூவுதிர‌
தன்னே நானே ...................

கப்பி கட்டை தன்னே நானே கலகலங்க‌
கை வளையல் தன்னே நானே சோதி மின்ன
தன்னே நானே ................

உழுது தொளி கலக்கி ஒண்ணு ரெண்டா நாத்தரிச்சு
பழுதுபடாமலிங்கு பக்குவமா நட்டு வாங்க‌

நாத்தரிச்சு நானறியேன் நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள எறங்கிக்கிட்டு செல்ல முகம் வாடுறேனே

தண்டட்டி போட்ட புள்ளே தானா வளர்ந்த புள்ளே
மேலேடு போட்ட புள்ள அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே அடி தங்கமே தங்கம்
மெலியறேண்டி ஒன்னாலே

தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)
சொய்ங்...................... ஹாங்
பச்ச மொளகா நறுக்கி வச்சு
பசுவ வெண்ணை உருக்கி வச்சு
பத்து தோச அடுக்கி வச்சு
பப்படத்த பொரிச்சு வச்சு
தோச திங்க...ஆ
தோச திங்க ஆசையாகுதே பட பட பட சுட சுட சுட (3)

ஆஹா .... ஓஹோ

புன்னை மரத்து கொம்பை வளைத்தொரு
தொட்டில் தொங்குது அதில்
பூவினைப் போல மேனி படைத்த
குழந்தை துங்குது
ஆரிரோ ஆராரோ ... ஆரிரோ ஆராரோ

என்ன நினைத்து காலை உதைத்து பாப்பா சிரிக்குது
அதன் சின்ன சின்ன மணி கண்ணுக்குள்ளே
ஒரு நாடகம் நடக்குது

புன்னை மரத்து ..........